எழிலோவியக் கவிதை

அழைத்தாள் ஒருமுறை - அவளை
அரவணைத்தேன் பலமுறை.
பாலில் கலந்தது சர்க்கரை
பாவைக்கு என்மீது அக்கறை.
எழுதாத வெள்ளைத்தாளில்
எழுதிய வார்த்தையாய்
என்னுள் எழுந்தவள் அவளல்லவா
எந்நாளும் நான் வாசிக்கும்
எழிலோவியக் கவிதையல்லவா
எங்களுக்குள் எழுந்தது இலக்கணம்.
எதுகையும் மோனையுமாய்
வரவு வைத்தோம் இக்கணம்.
சித்திரம் சிதையாமல் எழ
பத்திரமாய் பதம் சேர்க்கும் தூரிகையாய்
விசித்திரமாய் என்னுள் அவள்
விளங்கி நின்றாள் விலகாத பேரிகையாய்.
மெல்லவே மேகத்தை விலக்கி - விழிகளை
அள்ளவரும் முழுநிலவாய் வளர்ந்தாள்
துள்ளிவரும் அருவியைப்போல்
துவளாமல் என்னருகே பாய்ந்தாள்
தொட்டதும் நாணத்தால் பயந்தாள்.
விட்டதும் பறந்துவிடும் பட்டம்போல்
வெட்கத்தால் விலகி மறைந்தாள்.
மறைந்தவள் கைபேசியை
மீண்டும் அலறவிட்டாள் - அவள்
மனம் தூண்டுவதை மலரவிட்டாள்

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (28-Jun-20, 5:22 pm)
பார்வை : 158

மேலே