காதல் போயின் 💘💘

மெய்யோடு மட்டும் கூடும்
பொய்யல்ல...
கையில் புண் என்றால்,
கலங்கும் கண் தான் காதல்.!!
துருவங்கள் போல
தூரம் தூரம் நிற்பதல்ல...
ஒட்டி இல்லாவிடினும்
ஒன்றாக பயணிக்கும்
தண்டவாளம் தான் காதல்.!;
கண்ணீரில் முகம் கழுவும்
இமையல்ல...
புருவங்களாய் அருகருகில்
புரிந்து வாழ்வது காதல்.!!
ஆயினும்...
அது...
தரம் பாரா...
நிறம் பாரா வரும்போது...
வேர்களே இங்கு
வெட்டும் கிளைகளை.!!
அதன் குருதி வழிந்து...
குளமென நிற்கும்.!!
ஆதிக்க வெறியும்...
அடையாளத் திமிரும்...
மனிதத்தையே இங்கு...
மதிக்காத போது...
காதல் என்ன செய்யும்.?!?