கம்பன் ஆக நான் இருந்தால்

அவள்
எடுத்தாள் செல்ஃபி
செல்போனில்
பதிவானது குல்ஃபி

வள்ளலாரும்
நானும் ஒன்றுதான்
அவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார்
நானோ உன் வாடிய முகத்தை
கண்ட போதெல்லாம் வாடினேன்

சுந்தரியும்
முந்திரியும் ஒன்றுதான்
இருவருமே இதயத்தை
அடைத்துக் கொல்பவர்கள்

நான் கம்பனாக
இருந்திருந்தால்
ராமகாதை எழுதாது
உன் காதைப் பற்றி
எழுதியிருப்பேன்

நான் பாண்டிய மன்னனாக இருந்திருந்தால்
கூந்தலுக்கு மணம்
செயற்கை என்ற
நக்கீரரை சிறையிட்டு இருப்பேன்

மயிலிறகை
நீ உன் புத்தகத்தில் வைத்தாய்
குட்டி போடுவதற்காக
உன் புகைப்படத்தை நான் என் புத்தகத்தில் வைத்தேன்
உனக்கு மெட்டி போடுவதற்காக

பால் வண்ணப் பல்லும்
முகத்தில் கலையும் கொண்டு
நீ அழகிகள் முன்னேற்றக் கழகத்தில்
பொதுச் செயலாளராக
இருப்பதால் உலகத்தின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் நீதான்

உன்னைக் காதலித்த அனைவரும்
மனநல மருத்துவமனையில்
நீ காதலித்த ஒருவன் மட்டும்
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவனாக...

நான் வள்ளுவனாக
இருந்திருந்தால்
அறத்துப்பாலைப் பற்றி
எழுதாது இந்த அமலாபாலை பற்றித்தான் எழுதி இருப்பேன்

எழுதியவர் : குமார் (28-Jun-20, 2:13 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 213

மேலே