அவளைத் தொட்டு எழுதுகின்றேன்

நான் தொட்டு எழுதும்
வார்த்தைகளெல்லாம்
உன்னைத் தொட்டு எழுதப்பட்ட
வரிகளாகும்.- என்னைத்
தொட்ட எழுத்துக்களில் - நான்
உன்னையேக் காண்பதால் - அதில்
உயிரெழுத்தாய் உன் பெயரைக் காண்கிறேன்.
எழுத்துக்களுக்கு உயிர் வந்தது உன்னால்தானோ?
இன்று அதை நான் உணர்கிறேன்.
என் கவிதைகளுக்கு உயிர் வந்தது
என்னவளே உன்னால் தானே. - அதனால் தான்
எழுதும் போதெல்லாம் - மெய்
எழுத்தாய் வருகின்ற இடங்களில் - உயிர்
எழுத்தாய் இருக்கின்ற உன்னைத் தொட்டு
எழுதுகின்றேன். - காகிதத்தில் பதிந்த
எழுத்துக்கள் மாறாது. - என்னுள்
பதிந்த உன் நினைவுகளும் தேயாது.- என்
இதயத் தாளில் பதிந்துவிட்டவளே.
இன்று புரட்டிப் பார்க்கின்றேன் - அதில்
என் உயிரும் ஒட்டி இருப்பதை.

எழுதியவர் : சங்கு chandramoulee (12-Jan-18, 4:34 am)
பார்வை : 98

மேலே