அவள் பார்வையில் என் கோலம்

புள்ளிகளை கோடுகள் இணைக்கிறது - உன்
பார்வையோ என்னை இழுக்கிறது.
புள்ளிகளை இணைத்தக் கோடுகள் கோலமானது.-உன்
பார்வையில் விழுந்த என் மனமோ அலங்கோலமானது.
தறிக்கெட்டு ஓடும் வண்டியைப் போல் - நானும் உன்னால்
நெறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன். - என்னவளே
சரிக்கட்ட என்னோடு நீ இணைவாயோ? - காதல்
அரிசுவட்டில் கலந்து கற்றுத் தருவாயோ?
புள்ளிகள் புள்ளிகளாய் இருந்தால் கோலமாகாது - நீயும் நானும்
தள்ளியே இருந்தால் தாம்பத்தியம் கிட்டாது. - நீ
புள்ளி என்றால் நான் கோடு ஆவேன். - இந்தக்
கோடு உன்னோடு இணைந்தால் - நீ அழகான
வாழ்க்கைக் கோலத்தில் அழியாமல் பதிந்திருப்பாய்.

எழுதியவர் : சங்கு chandramoulee (9-Jan-18, 6:02 am)
பார்வை : 388

மேலே