இவளும் அவளும் இவள் - விதவை, அவள் - விவகாரத்தானவள் விதவை, விவாகரத்தான பெண் குழந்தைகளுடன் திருமணம் செய்தால்

தனக்காக
தானே மாலை சூடினாள் ஒருத்தி.
தன்னை ஈன்றவர்களுக்காக
தான் மாலை சூடினாள் இன்னொருத்தி.
இலையில் பரிமாறிய விருந்தென
இல்லற சுகத்திற்காக கற்பினை
இன்பமுடன் பரிமாறினர் - இதனால்
மாலை சூடிக் கொண்டவர்களுக்கு
மலராகப் பூத்தன பெண் பிள்ளைகள்.
விருந்து உண்டவன் விடை பெறுதல் போல் - தானே
மாலை சூடியவளை கைக்கழுவினான்.
தலையில் விழுந்த இடியென - தான்
மாலை சூடியவளின் தலைவன்
மதிகெட்டு குடியில் மாண்டுப் போனான்.
வாழ்க்கை வெட்டியானது அவளுக்கு.
வாழ்க்கை வெட்டியது இவளுக்கு.
விவாகரத்தில் விடைப் பெற்றாள் அவள்.
விளங்காமல் தவிக்கிறாள் இவள்.
இவளும் அவளும் - பூத்த
இருமலர்களின்
நறுமணத்தில் நகர்த்தினார் நாட்களை.
மறுமணத்தில் கூடிட - இவர்களுக்கு
ஒருமனதாக உய்யவில்லை. - கரைதேடும்
ஓடங்களே - உங்களில்
ஒருத்திக்கு வாழ்வின்
மறுபுறவாசலை திறந்து வைக்கின்றேன்.
மறுக்காமல் மனதை தெளிவாக
புரட்டிப் பாருங்கள். - அன்று
உங்களை தொட்டவர்கள் - காமத்திற்காக
உங்களை உடலைத் தொட்டார்கள் - ஆனால் நானோ
உங்கள் உணர்வுக்காக - அந்த மலர்களுக்காக
உணர்வைத் தொட நெருங்குகிறேன்.
துணையே இன்றி தனித்து வாழும் தாரகைகளே
தருகிறேன் நம்பி இவன் கைகளே. - உங்களின்
அழுக்குப் படிந்த வாழ்க்கையை
அழகுப்படுத்த நானொருவன்
அழைக்கின்றேன் - இருவரில் ஒருவர்
அடைக்கலம் ஆகுங்கள் - துணையின்றி வாழ்வதால்
சீறிவரும் வதந்திகளை
சீர்குலைக்க என்னை
சீதனமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
சிறப்பான புதுவாழ்வினை காண்போம்.
இருண்டுபோன உங்கள் வாழ்வில்
வெளிச்சமாக என்னை காணுங்கள்.

எழுதியவர் : சங்கு chandramoulee (13-Dec-17, 4:42 am)
பார்வை : 75

மேலே