அவளால் நான் சிரஞ்சீவி

காற்றைப் போல் என்மீது மோதியவளே - அதில்
காதல் அல்லவா சுவாசமாக வருகிறது.
கண் ஜாடையில் அம்பைத் தொடுத்தவளே - அதில்
காயம்பட்ட மனதில் அன்பை அல்லவா தெறிக்கிறது.
சொற்கள் கொண்டு கல்லாய் வீசியவளே - அதில்
சுகமல்லவா என்மேனியில் வந்து வீழ்ந்தது.
என்றுநீ என்பார்வையில் பட்டாயோ - நான்
அன்றிலிருந்து உன்நினைவு குண்டுகளால்
துளைக்கப்பட்டு இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால் நான் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி.- என்
உள்ளத்தில் உன் எண்ணங்களே மருந்து சஞ்சீவி.- என்னை
வளைத்துப் போட்டவளே - வா
வாழ்ந்துக் காட்டுவோம்.- வாழ்வின்
விடியல் நமக்காக வளைந்து வருகிறது.- அந்த
வளையத்திற்குள் ஒன்றாக இணைவோம்

எழுதியவர் : சங்கு சந்திரமௌலி (4-Dec-17, 7:01 am)
பார்வை : 97

மேலே