பேச வைத்த விழிகள்

தீட்டான சொற்களுக்கு
மத்தியில்
ஏதேதோத் தேடிக்கொண்டிருக்கிறேன்

வழுக்கிப்போன
வாக்கியங்களுக்கு
இடையில்
சில சொற்களைச் சொருக
நினைக்கிறேன்

அடுக்கடுக்கான
வரிசைகளின்
முதலில்
பூமாலையாகக் கோர்த்து
வைக்கிறேன்
இதழில் தவழும்
சொற்களை

சில நிமிடங்கள்

கழிந்தது
பல
நிமிடங்கள்

மாலை இன்றும்
மணந்துகொண்டே இருக்கின்றது............

எழுதியவர் : மு.கவியரசன் (24-Jun-18, 8:01 pm)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 307

மேலே