நீ

நான் பார்க்கும் போது
நீ தான் என் கண்கள் !!
நான் பேசும் போது
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது
நீ தான் என் விடியல் !!
நான் எழுதும் போது
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது
நீ தான் என் சுவாசம் !!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!

எழுதியவர் : PALANISAMY (5-Jan-17, 11:48 am)
சேர்த்தது : பழனிச்சாமி
Tanglish : nee
பார்வை : 221

மேலே