உன் மெளனத்தில் என் வாழ்க்கை

முதல்முறை உன்னை காணும்போது உண்மையில்
பெண்மை யாதென உணர்ந்தேன்
உன் கண்மையில் என் மெய்யும்
உருகிட கரைந்து போனேன் கண்ணே.
என் கண்களின் தவம் அன்று நிறைவானது
உன் முத்துப் புன்னகை கண்டபோது.
ஓர் வார்த்தையேனும் பேசுவாய் என்றுதான்
உன் வழிநெடுக காத்திருக்கிறேன் காவல்காரனாய்.
என் வேதனை உன் விழியோரம் சிரிக்கிறதடி.
ஓரப்பார்வை ஆயிரம் மொழி பேசிட
எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய எனக்கு தெரியவில்லை.
பார்க்கும் போதல்லாம் உன் பார்வை பேசியது,
சில்லென்று உன் மூச்சுக் காற்றும் பேசியது,
எனையறியாமல் விரல்பட உன் நானமும் பேசியது,
என் இதழ்கள் காதலில் சிரிக்க உன் வெட்கமும் பேசியது.
இத்தனையும் உனக்காக பேச என்னவளே
எனக்காக ஒரு வார்த்தை பேச
உன் இதழ் மடல்கள் திறவாதோ?
கனிஅமுதாய் ஓர் மொழி பேசடி என்றேன்
உன் கடைக்கண் பார்வையில் பேசினாய்,
ஏழ்பிறப்பும் என் வாழ்க்கை உன்னோடு என்றேன்
சம்மதம் என்று வெட்கத்தில் பேசினாய்.
நான் அறியாத பல மொழிகள் நீபேச
என் உலகமே நீயாக எனை மறந்தேன்,
மெளனத்தில் காதலின் சுவை அறிந்தேன்
இமைகடந்து விழிவழியே உன் இதயத்தில் எனைக் கண்டேன்.
என் காதல் நான் உரைத்தேன் இக்கவிதை வழியே
உன் மெளனம் உடைத்து காதலை உரைப்பாய் எப்போது?......

எழுதியவர் : தமிழ் ப்ரியா (5-Jan-17, 2:11 pm)
பார்வை : 394

மேலே