Sugi Viththiya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sugi Viththiya |
இடம் | : ஈழம் |
பிறந்த தேதி | : 12-Aug-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 445 |
புள்ளி | : 149 |
நினைவுகள் சுகமானது
நிதர்சனம் கனமானது !!!
நாய் வாலை நிமிர்த்திப் பார்த்தேன்
கையைப் பிடித்துக் கடித்தது
இயற்கைக்கும் செயற்கைக்கும்
உள்ள வேறுபாடு
இப்போது புரிந்தது.
மனதெல்லாம்
தூய்மை துருப்பிடித்திருக்க
உருப்படத் தெரிந்தவர்க்கு
ஆனந்த வாழக்கை.
ஆன்மீக ஆடை
பாதுகாப்பு கவசம்
உண்மை வெளிப்படும் வரை
தாய்மை என்றால் எனக்கு அப்படி என்கிறார்கள்...
ஆனால்...
அடுத்தவர் தாயை தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்..!
நண்பரின் குழந்தையை அடிக்காமல் தடுக்கிறார்கள்...
ஆனால்...
தான் பெற்ற குழந்தையை தாறுமாறாய் அடிக்கிறார்கள்..!
கற்கவைக்கும் கல்விமான்கள் நாங்கள் என்கிறார்கள்..
ஆனால்...
அவர்தம் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிக்கிறார்கள்..!
இவருடன் இருக்கும்வரை கவரிமான் என்கிறார்கள்..
ஆனால்...
எதிர்வரிசை சென்றவுடன் பச்சோந்தியில் சேர்கிறார்கள்..!
இவர் கைகாட்டினால் பேருந்து நிற்க சொல்கிறார்கள்..
ஆனால்...
அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினால் ஏனோ சீறுகிறார்கள்..!
தனக்கு மட்டுமே நட்பு வேண்டுமென ஓடுகி
எத்தனை பேர்
ஒன்றாய் இணைந்து
ஊளையிட்டாலும்...
ஒரு மூங்கிலில் இருந்து
புறப்பட்ட ஒரு
புல்லாங்குழல் இசைக்கு
ஈடாகுமா...?
நீ செய்த தவறை
சுட்டிக் காட்டியதால்
என் நட்பு
போலியானது என்றாய்.
உன் தவறைத்
திருத்த முடியாத
போலியான நட்பாக
நான் இருக்க விரும்பவில்லை!!
என்னுடன்
தொடர நினைத்திருந்தால்
என்னை விட்டுச் செல்ல
வழி தேடி இருக்கமாட்டாய்.
விட்டுச் செல்ல முடிவெடுத்ததால்
காரணமின்றி சென்று விட்டாய் !!
என்னை நீ
பிரிந்தவேளையில் இருந்து
என் கண்கள் சிந்திய கண்ணீரை
மிச்சப்படுத்தி இருந்தால் ...
என் வாழ்நாளுக்கான தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்திருப்பேன் !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
கண்ணீர்த் துளிகள் !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
நான் துரோகி !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
எனக்கு அவமானம் !!
எல்லாம் தந்தது
காதலாக இருந்திருந்தால்
ஏற்றிருப்பேன்.
நட்பாகப் போய்விட்டதே
என்ன செய்வேன் ????