சில நேரங்களில் பல மனிதர்கள் - குமரி பையன்

தாய்மை என்றால் எனக்கு அப்படி என்கிறார்கள்...
ஆனால்...
அடுத்தவர் தாயை தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்..!

நண்பரின் குழந்தையை அடிக்காமல் தடுக்கிறார்கள்...
ஆனால்...
தான் பெற்ற குழந்தையை தாறுமாறாய் அடிக்கிறார்கள்..!

கற்கவைக்கும் கல்விமான்கள் நாங்கள் என்கிறார்கள்..
ஆனால்...
அவர்தம் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிக்கிறார்கள்..!

இவருடன் இருக்கும்வரை கவரிமான் என்கிறார்கள்..
ஆனால்...
எதிர்வரிசை சென்றவுடன் பச்சோந்தியில் சேர்கிறார்கள்..!

இவர் கைகாட்டினால் பேருந்து நிற்க சொல்கிறார்கள்..
ஆனால்...
அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினால் ஏனோ சீறுகிறார்கள்..!

தனக்கு மட்டுமே நட்பு வேண்டுமென ஓடுகிறார்கள்..
ஆனால்....
அடுத்தவர் தொடர்ந்தால் தடுத்து நிறுத்த பார்க்கிறார்கள்..!

இறைவனிடம் எல்லா வரமும் வேண்டி நிற்கிறார்கள்..
ஆனால்...
இவர்கள் சதா வாய் நிறைய மற்றாரை சபிக்கிறார்கள்..!

கேட்டால் இதுதான் இவ்வுலகமாம் அவர்கள் சொல்கிறார்கள்...
ஆனால்...
நான் சொன்னால் அவர்களே ஓடி வந்து அடிக்கிறார்கள்..!

எழுதியவர் : குமரி பையன் (15-Dec-13, 3:06 pm)
பார்வை : 862

சிறந்த கவிதைகள்

மேலே