a.lawrence - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/zmjct_4886.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : a.lawrence |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 09-Sep-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 578 |
புள்ளி | : 215 |
ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் , கவனம் எல்லாம் தாய் தமிழின் பக்கம் . எனக்கு ஒரு மனைவி , என் புகைப்படக் கருவி . இரண்டு குழந்தைகள் . மகளுக்கு 33 வயது , மகனுக்கு 8 வயது . காதலித்து மணம் முடித்தோம் , இன்னும் எங்கள் காதல் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது, என் மனைவி - கண்ணகி , சீதை இந்த உதாரணங்களை விட சிறந்தவள். ஒரு மனைவி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இவள் நல்ல ஒரு உதாரணம்.எனக்கும் என் மகனுக்கும் நல்ல தோழி.
முகநூல் கணக்கு...!
கூட்டல் பெருக்கலில் சிலகுப்பைகள் கூடிடும்
கழித்தல் வகுத்தலில் நல்நட்புகள் விலகிடும்
பிரபலங்கள் என பிரம்மிப்பில் கூட்டினும்
பெருந்தகையோர் என பெருமித்த்தில் பெருக்கினும்
பெரும் நிகர லாபம் வெற்று பூஜ்ஜியமே...
பண்புசால் அன்பு உள்ளங்களை
பகுத்துணர்ந்து வகுத்து நட்பில் இணைத்தால்
பாச நேசங்கள் ஈவாய் சேரும்
பசபசப்பு மீதிகள் கழிந்து ஒழிந்து
பாதையை விட்டு தானாய் விலகும்...!
கவிதாயினி அமுதா பொற்கொடி
#பொறாமை...!
தன்னை அழிப்பதற்கு கொடிய விடமொன்று
தாமே சமைப்பார் அது பொறாமை
அள்ளிப் பிறர் நெஞ்சில் கொல்லி நெருப்பெனவே
வீசி மகிழ்வார் அது பொறாமை..!
தன்னைத்தான் கொல்லும் கொடிய சினம் போலும்
தன்னையே கொல்லும் அது பொறாமை
அரக்கப்பசி போல ஆட்டிப் படைத்திடும்
உறக்கம் நீக்கிடும் அது பொறாமை..!
தோல்வி காண்கையில் வெற்றி கொண்டவனை
வீழ்த்த நினைப்பார் அது பொறாமை
வெற்றி இரகசியம் கண்டு உணர்ந்திட
கண்ணை மறைக்கும் அது பொறாமை..!
அன்பு மனதோடு பிறரை எண்ணுகின்ற
நெஞ்சில் இல்லை என்றும் பொறாமை
பிறரின் உயர்வினில் உள்ளமும் மகிழ்ந்து
பாராட்டும் மனதிலில்லையே பொறாமை..!
பொறாமையொழித்தவர் மனது பூக
வேப்பம் பழம்தின்ற பறவை
வேறிடத்தில் எச்சமிட்டுச் சென்றது
விதை மெல்ல...
விருட்சமாயிற்று...!
விருச்சத்தின் நிழலிலமர்ந்து
விதைகள் சேகரித்தேன்
நட்டுவைக்கும் எண்ணம் மட்டும்
எழவில்லை எப்போதும்...?
-------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்
விதையோடு
விஷம் போட்டு
வளர்ப்பதாலோ
என்னவோ
விவசாய பொருட்களின்
விலைவாசியும்
விஷம் போலே
ஏறுதய்யா .
பூச்சிக் கொல்லி
போடாத காய்கறியெல்லாம்
கண்காட்சிப்
பொருளாய் மாறுதய்யா.
வயல் வெளிகள்
நீரன்றி வறண்டு போச்சு
அத்தனையும் வீடு கட்ட
தனி பிளாட்டா மாறிப்போச்சு !!
நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை
விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்
கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது !
மீனவர்கள் - இலங்கை என்று
செவிகளில் விழும் போதெல்லாம்
இந்த பாடல் வரிகளும் சேர்ந்தே விழுகிறது !!
என்ன தான் நடக்குது
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ?
இவ்ளோ பெரிய நாடு இலங்கைகிட்ட
ஏன் தான் அடிபணிஞ்சு போகுதோ ?
கேள்விகளோடு நாமும் அவ்வப்போது
கடல் அலை போல எழுந்து மறந்து விடுவோம் .
யார் வகுத்த அரசியல் தந்திரமோ
இன்றுவரை தழுவல்கள் தவறாது - கடைபிடிக்க
மீனவனுக்கு மட்டும் தடைக்காலம்
நீண்டு கொண்டே போகிறது அந்த நீலக்கடல் போல .....
மீனவன் பிடிப்பதும் மீன் அவனை
பிடிப்பதுமான காலம் பழையது !!
மீனவன் பிடிப்பதும் இலங்கை
முட்டாள் சிங்களவனே
முழத்துக்கு முழம்
அடுக்கி முடுக்கி விடு
இன்று உன்
காட்டேரி படையை.
எங்காவது ஒரு
தமிழன் வீட்டில்
விளக்கு எரிகிறதா...
எட்டிப்பார்
பல்கலைக் கழக வாயிலில்
படையைக் குவி.
பாடசாலை வளவில்
காடையர்
கடையை விரி.
அப்பாவி மாணவரின்
சட்டைப்பையை தட்டிப்பார்.
ஈகைச் சுடர் ஏற்ற
எங்காவது ஒரு மெழுகுதிரி
ஒளிந்து கிடக்கிறதா என்று.
இருந்தால்.......
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் கைது செய்.
பனாகொடையில் அடை
முட்டிக்கு முட்டி தட்டு.
முழியை தோண்டு.
மொத்தத்தில்
நம்மை முடிந்தவரை கொல்
முழு உலகுக்கும் சொல்
முடித்து விட்டோம்
பயங்கரவாதியை என....
ம
காதலித்து பெரும் போராட்டத்தில் மத்தியில் இணைந்து கொண்ட காதலர்களும்கூட பிரிந்துவிடுகின்றனர்.
இரண்டு உள்ளங்கள் இணைவதற்கு ஆசை அறுபதும் மோகம் முப்பதும்தான் என்கிறேன் நான்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை
சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது
காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?
வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?
இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?
கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?
எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை
சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது
காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?
வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?
இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?
கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?
' ற் ' என்பது இறந்தகால இடைநிலை என்பதும் , 'ற்' என்ற எழுத்துக்கு பின்னால் எந்த புள்ளிவைத்த எழுத்தும் வரக்கூடாது என்றும் நான் அறிந்திருக்கிறேன் . தமிழ் மட்டுமே ஆதாரமாய் கொண்டு இருக்கும் இந்த இணையத்தில் அது போன்ற பிழைகளை காணும் போது மனம் வலிக்கிறது. எழுத்து. காம் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது கூடுதல் வேதனை .
நண்பர்கள் (81)
![வாசு](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வாசு
தமிழ்நாடு
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி
![Dr ரத்னமாலா புரூஸ்](https://eluthu.com/images/userthumbs/f3/akfgj_30354.jpg)
Dr ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்
![சுகுமார் சூர்யா](https://eluthu.com/images/userthumbs/f3/atxgc_30864.jpg)
சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை
![கேசவன் புருசோத்தமன்](https://eluthu.com/images/userthumbs/f3/ixtwn_32611.jpg)