அணையாது தீபங்கள்

முட்டாள் சிங்களவனே
முழத்துக்கு முழம்
அடுக்கி முடுக்கி விடு
இன்று உன்
காட்டேரி படையை.
எங்காவது ஒரு
தமிழன் வீட்டில்
விளக்கு எரிகிறதா...
எட்டிப்பார்
பல்கலைக் கழக வாயிலில்
படையைக் குவி.
பாடசாலை வளவில்
காடையர்
கடையை விரி.
அப்பாவி மாணவரின்
சட்டைப்பையை தட்டிப்பார்.
ஈகைச் சுடர் ஏற்ற
எங்காவது ஒரு மெழுகுதிரி
ஒளிந்து கிடக்கிறதா என்று.
இருந்தால்.......
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் கைது செய்.
பனாகொடையில் அடை
முட்டிக்கு முட்டி தட்டு.
முழியை தோண்டு.
மொத்தத்தில்
நம்மை முடிந்தவரை கொல்
முழு உலகுக்கும் சொல்
முடித்து விட்டோம்
பயங்கரவாதியை என....
முழு மூடனே இதை விட
வேறு எதை நீ செய்வாய்

மாவீரர்கள்
மானமுள்ள ஒவ்வொரு
தமிழனின் மூச்சுக்
காற்றிலும் நீக்கமறக்
கலந்த தெய்வங்கள்
எம் மனைகளில்
பள்ளிகளில் கோயில்களில்
மறைந்த வீரருக்காய்
ஈகைச் சுடர் எரித்து
அஞ்சலி செலுத்த
தடுத்திடும் நீ
எம் மக்கள் மனங்களில்
கொழுந்து விட்டு எரியும்
விடுதலைத் தீயிற்கு
மேலும் மேலும்
எண்ணெய்
ஊற்றிச் செல்கிறாய்
அதை மட்டும் இனி
மறந்துவிடாதே!

எழுதியவர் : சிவநாதன் (27-Nov-14, 3:17 am)
பார்வை : 77

மேலே