பரதம்

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (6-Jun-15, 1:53 pm)
Tanglish : paratham
பார்வை : 1820

மேலே