முகநூல் கணக்கு

முகநூல் கணக்கு...!

கூட்டல் பெருக்கலில் சிலகுப்பைகள் கூடிடும்
கழித்தல் வகுத்தலில் நல்நட்புகள் விலகிடும்

பிரபலங்கள் என பிரம்மிப்பில் கூட்டினும்
பெருந்தகையோர் என பெருமித்த்தில் பெருக்கினும்
பெரும் நிகர லாபம் வெற்று பூஜ்ஜியமே...

பண்புசால் அன்பு உள்ளங்களை
பகுத்துணர்ந்து வகுத்து நட்பில் இணைத்தால்
பாச நேசங்கள் ஈவாய் சேரும்
பசபசப்பு மீதிகள் கழிந்து ஒழிந்து
பாதையை விட்டு தானாய் விலகும்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (9-Sep-17, 8:26 am)
பார்வை : 67

மேலே