காதல்

எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை

சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது

காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?

வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?

இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?

கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?

எழுதியவர் : ஆ. லாரன்ஸ் (18-Apr-14, 12:10 am)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே