உன் விழிகளில் வீழ்ந்தேன்
கார்கூந்தல் மேவிய
தாரகையே...
உன் கண்ணிரு விழிகளுக்குள்
கைதியானேன்..!
வெண்பனி மூடிய
பொன்மலரே..
உன் வெளிச்சத்தில்
நானும் உறைவேனோ...!
பூஞ்சோலை உடுத்திய
எழில் ரதமே..
பேரழகுடன் உயிர்த்திட்ட
அழகோவியமே..!
நான் வாழ்ந்திட
தரிசனம் தந்தயென் ரதியே..
தரணி இறங்கிவந்த
சொர்க்கத்தின் செந்தாமரையும் நீயே..!
உன்னிருவிழி பார்வைக்குள்
மூழ்கியே...
என் வாழ்க்கை பயணத்தை
தொடர்வேனே..!
மின்னிடும் கலங்கரை
விளக்காய்..
மிளிர்ந்திடும் கண்கள் சிமிட்டியே
எனை காதல் கரை சேர்பாயோ..!
உன் விழி கொஞ்சும்
மொழி அழகில்..
என்னுயிர் ஒழுகி காதலாகும்
என் இனியவளே..!!
...கவிபாரதி...