நான் தான்

நான் தான்

என்னை பார்க்க வராதே என்று
சொன்னவளும் நான் தான்
உன் பார்வைக்காக ஏங்கி இருப்பவளும்
இப்போது நான் தான்...

அலைபேசியில் இனிமேல் என்னை அழைக்காதே என்றவளும் நான் தான்
உன் அழைப்பை ஏற்பதற்காகவே அலைபேசி ஐ
கையில் எடுப்பவளும் நான் தான்....

உன்னை மறந்ததுவிட்டேன் மறந்துவிட்டேன்
என சொன்னவளும் நான் தான்
அப்படி சொல்லிக்கொண்டே உன்னை நினைக்கிறன் என்பதை சொல்பவலும் நான் தான்...


என்னை விட்டு தூரம் போ என்று
சொன்னவளும் நான் தான்
உன்னை துரத்தி துரத்தி இப்போதும்
நினைபவலும் நான் தான்....

உன்னை உண்மையாக நேசிதவளும்
நான் தான்
இப்போது ஊமையாக இருப்பவளும் நான் தான்..

பிஸியாக இருக்கிறேன் என நீ சொன்னதை
ஏற்று கொண்டவளும் நான் தான்
ஆதலால் அங்கு பாசத்திற்கு இடமில்லை என ஒத்து கொள்பவளும் நான் தான்...

24 மணி நேரமும் கால் செய்தவளும் நான் தான்
இப்போது 24 நாட்களில் ஒரு முறை கூட கால் செய்யாதவலும் நான் தான்

உன்னை நன்றாக புரிந்து கொண்டேன் என சொன்னவளும் நான் தான்
இப்போது உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன் என்பவளும் நான் தான்....

ஊமைக்கும் தெரியும் உண்மையின் மொழி
உனக்கும் புரியும் என அன்பின் மொழி


ஆதலால் நீயும் அறிவை
இந்த பிரிவின் வலி வலி வலி.....

எழுதியவர் : vasu (18-Apr-14, 12:09 am)
சேர்த்தது : வாசு
Tanglish : naan thaan
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே