இராசகோபால் சுப்புலட்சுமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இராசகோபால் சுப்புலட்சுமி |
இடம் | : சங்கரன்கோயில் |
பிறந்த தேதி | : 01-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-May-2014 |
பார்த்தவர்கள் | : 781 |
புள்ளி | : 123 |
இன்னும் சரியாவே புரியமாட்டேங்குது......
காதல் தோல்வி இரண்டு வரி கவிதைகள் வேண்டும்? கவிஞர்களே கொஞ்சம் பகிருங்கள் ப்ளீஸ்....
நம்பிக்கை ...வை
நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!
உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...
இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...
வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...
அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்
விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...
வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...
வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!
தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...
'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...
காயங்கள்
ஆற
ஒரு பயணத்தின் சுகந்தத்தில்
முகமுரசிய காற்றை
உயிர்வரை உள்ளிழுத்து
கண்மூடி லயிக்கையில்
எப்போதும்போல்
இப்போதும்
அறியவில்லை
அகஅழுக்குகளையும்
அக்காற்று அதன்வழி
எடுத்துச்செல்லுமென்று...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்
கோப்புகளும்
அதன் குழப்பங்களும்
கூடவே வந்திறங்கின
அலுவலகம் விட்டு
வீடுவந்த பின்னரும்...
அடுத்தடுத்த பணிகளிலும்
அது தொடரவே
அசையாது மனம்
அயர்ச்சியிலிருக்க...
உடம்பு சரியில்லையாவென்ற
மழலையோடு சிலநொடி
மனம்திறந்து உரையாட
தன் இருப்பிடம் நோக்கி
தானாகவே நடைகட்டின
கோப்புகளும்
அதன் குழப்பங்களும்...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்
அவரது வாழ்க்கை காந்தியத்தைப் பிரதிபலித்திருக்கிறது.....
அவரைப் போற்றும் நாம் அவர் நிரூபித்திருக்கிற வாழ்வியலை கடைப்பிடிகிறோமா..?
நான் முயற்சிக்கிறேன்.... நீங்கள்...?
முயற்சிப்போம்... ஒன்றுபடுவோம்...
2020 - இல் அவர் விரும்பிய இந்தியாவைப் படைப்போம்....!
அழுகையாய் வருகிறது...
இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே...
அவர் அதை விரும்பவில்லையே...
அப்போ நான் என்ன செய்ய...
கண்ணீரைத் துடைத்தபடி
கடமையாற்றுவேன்....
அழுதுக்கிட்டே இருந்தாலும்
உழுதுக்கிட்டேதான இருக்கணும்...
"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்...
அப்போது நான் கைத்தறி நெசவாளன்....
இன்று நான் அரசு ஊழியன்....
என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்...
ஆம்... என் தலைவர் அவர்...
சிலை வைக்காமல்....
பாலாபிஷேகம் செய்யாமல்...
சுவரொட்டி ஒட்டாமல்...
சும்மானாச்சுக்கும் புகழாமல்....
உடலில் ரத்தம் உள்ளம் வரைக்கும்
உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்....
என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன்
"அக்கினிச் சிறகுகளை" விரிக்க....
கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்
கட்டடம் - கட்டிடம்
ஏற்கனவே - ஏற்கெனவே
காணும்போது - காணும் போது
அவ்வாறுதான் - அவ்வாறு தான்
- இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்களில் மிகச்சரியானது எது? தவறானது எது?
சரியெனக் கூறப்படும்பட்சத்தில் ஆதாரம் எங்கு திரட்டப்பட்டது?
அதன் இலக்கணம் எதில் உள்ளது? என்பது போன்ற தகவல்களைத் தாருங்கள் நண்பர்களே....
வேதனை
ஏலே...! ஏலே...! ஓடாதே நில்லு..!
ஏன் ஓடுற? எங்க ஓடுற?
சொல்லு தம்பி!
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இப்ப எங்கநீயும் போறன்னு
சொல்லிப்புட்டுப் போடா...!
இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இங்கநீ நடத்தும் அரிச்சுவடி
வாத்திமாரும் புரிஞ்சிருப்பாரோ?
.............................................
படைப்புகளுக்கு வெறுமனே நன்று, அருமை, சிறப்பு என்றெல்லாம் விமர்சிப்பது;
படைப்பை (மட்டும்) தீவிரமாக விமர்சிப்பது; குறிப்பாக முரண்படுதலை வெளிப்படுத்துதல்.
இவற்றில் எது ஆரோக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும்?
அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு.....
உறக்கம் துறந்து துடித்து எழுந்தது......
கனவு என்பதை மறந்த தாயுள்ளம்....
ஏனோ இவள் துடிப்பில் இருந்த தாயுணர்வை
உணர மறுத்த சமூகமோ மலடி
என்றது அவளை தன் தாயுள்ளம் மறந்து....
~கிருஷ்ணநந்தினி