இராசகோபால் சுப்புலட்சுமி- கருத்துகள்
இராசகோபால் சுப்புலட்சுமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [55]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
எங்கிருந்தாலும் வாழ்க...!
இங்கிருப்போருக்காய் வாழ்வேன்...!
பிரிந்து சென்றாய்
புரிந்தது வாழ்க்கை...
தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை மாற்றிவிடு..!
சிறப்பு....
சம்மட்டியால்
சமன்செய்யப்பட்ட இடத்திலும்
ஒருவிதை முளைக்கும்...
அதுதான் நம் மனதில்
உயிரோட்டத்தை விதைக்கும்....
- பிறந்தநாள் வாழ்த்துகள்...
உளவியல் உண்மை என்று நினைக்கிறேன்...
நான் பெரும்பாலும் அலுவலகம் முழுவதையும் அலுவலக வளாகத்திலேயே விட்டுவிட்டு பின்னர்தான் வீடு விரைகிறேன்...
தங்களின் சிந்தனை வெளிப்படும்... உதவும் உள்ளம் வெளிப்படும்... நம்மால் சிலருக்குப் பயன் உள்ளது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது....
மூடுவொரெல்லாம் மூடரே...
மூடர் வெல்வதில்லை....
நான்...
முன்புபோலில்லை
முகத்தில் மட்டுமல்ல
முதுகிலும் புதிதாய்
முளைத்துவிட்டன
கண்கள்...
- சிறப்பு
ஆனாலும்
நெஞ்சு நிமிர்த்தியே
நிற்கிறேன்
நாளும்...!
- சரியான பதிலடி....
தற்போது என்னிலை இதுவே....
நம்ம ஊர் பெரிய கோவிலைக் கட்டுன உக்கிரபாண்டிய மகாராஜா யாரையும் தொந்தரவு பண்ணாம ஒரு ஓரமா நிக்கிறாரு...
ஆனா ஒன்னேமுக்கா ரூபாய்க்கு செலவு பண்ணிட்டு உபயம்.... னு பதாகை வச்சுர்றாங்க....
கோவிலைக் கட்டுனவர பெரும்பாலும் ஊர்ல யாரும் தெரிஞ்சுக்க விரும்பல...
கொட்டகை போட்டவர??? சாமியா கும்புட்றாங்க.....
உக்கிரபாண்டிய துரையத்தான் எல்லாரும் மறந்துர்றாங்க....
வெண்சூரியன் - சிறப்பு
உன்னிலும் என்னிலும் விதைக்கப் பட்டுள்ளார் ......
சிறப்பு
"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்...
அப்போது நான் கைத்தறி நெசவாளன்....
இன்று நான் அரசு ஊழியன்....
என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்...
ஆம்... என் தலைவர் அவர்...
சிலை வைக்காமல்....
பாலாபிஷேகம் செய்யாமல்...
சுவரொட்டி ஒட்டாமல்...
சும்மானாச்சுக்கும் புகழாமல்....
உடலில் ரத்தம் உள்ள வரைக்கும்
உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்....
என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன்
"அக்கினிச் சிறகுகளை" விரிக்க....
அழுகையாய் வருகிறது...
இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே...
அவர் அதை விரும்பவில்லையே...
அப்போ நான் என்ன செய்ய...
கண்ணீரைத் துடைத்தபடி
கடமையாற்றுவேன்....
அழுதுக்கிட்டே இருந்தாலும்
உழுதுக்கிட்டேதான இருக்கணும்...
அவரது வாழ்க்கை காந்தியத்தைப் பிரதிபலித்திருக்கிறது.....
அவரைப் போற்றும் நாம் அவர் நிரூபித்திருக்கிற வாழ்வியலை கடைப்பிடிகிறோமா..?
நான் முயற்சிக்கிறேன்.... நீங்கள்...?
முயற்சிப்போம்... ஒன்றுபடுவோம்...
2020 - இல் அவர் விரும்பிய இந்தியாவைப் படைப்போம்....!
படைப்பின் நோக்கம் உயர்வு...
ஆனால்....
படைப்பில் வறட்சி தென்படுகிறது...
கிறீச்சிட்டபடி - கீறிச்சிட்டபடி
இருளான நெஞ்சை கிழித்தபடி
வெளிச்சத்தின் வேர்கள்
- சிறப்பு
திரு
திருச்செல்வன்
வேப்பமுத்து பொறுக்கி விலைக்குப் போட்ட ஞாபகம் வருகிறது....
நட்டு வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு...
மரங்களை நட்பாகவும் பாவிக்கிறேன்...
எங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு நட்பு உயிரைக் காக்கிறது...
பார்த்த பொழுதெல்லாம் வாக்களிக்கிறேன்...
படிக்கும்பொழுதே வாக்களிக்கிறேன்...
ஏற்கனவே வாக்களித்து விட்டதாக
"எழுத்து" எந்திரம் சொல்கிறது...
நான் என்ன செய்ய...?
இதுபோன்ற கவிதைகள் ஏன் முதலிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை....
முதலிடம்தனை "எழுத்து" தந்தாலும் தராவிட்டாலும் மனதில் இடம்பிடிப்பதை மறுக்க முடியாது....