உள்ளும் வெளியும்

தன் இறுமாப்புகளை
தனக்குள் புதைத்துவிட்டு
வெளியெங்கும்
வெளிச்ச விதைத்தூவினான்
வெண்சூரியன்...!
என் இறுமாப்புகளை
என்னுள் விதைத்துவிட்டு
எதையும் செவிமடுக்க
திராணியற்றிருந்தேன்
நான்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்