கலாம் உமக்கு சலாம்

ஏழையின் குடியில் பிறந்த
இலக்கண மனிதா
இன்றுமுதல் நீ இமயத்தை தாண்டிடும்
புகழுக்கு சொந்தகாரராகி விட்டீர் ..........

அன்பு அடக்கம் தன்னம்பிக்கை
என்னும் மனிதப்பன்புகளுக்கு
மறு பிறப்பளிக்கும்
அணு விதையாய் மாறிவிட்டீர் ...........

பாரத ரத்தினமாய் ஒளிர்ந்தபொழுதும் கூட
பாமரர்களின் ரத்தினமாகத்தனே இருந்தீர்
விடியல்களின் விலாசங்களை
இளைஞர்களுக்கு உணர்த்திய அற்புத ஆசான் ........

கடவுள்களின் கருணை தத்துவத்தை
கொண்டிருந்ததால் கலாம் உன்னை
காலம் கடவுளாகவே மாற்றிவிட்டது ...........

பாவங்களை கரைத்த ராமேஸ்வரம் மண்ணில்
இன்று புதைக்கபட்டிருக்கிறது
ஒரு புண்ணிய விதை ............

தன்னலமில்லாத பொதுநவாதியான
உன் மறைவிற்கு உலகமே
ஒப்பாரி வைக்கிறது உளமார ............

வாழ்க்கையில் வாழும் விதத்தை
எத்தனையோ பேருக்கு எளிதாய் புரியவைத்திருக்கிரீர்
நீ இலக்கணமாய் வாழ்ந்து ............

கோடியில் ஒருவனாய் நீர் வாழ்ந்தாலும்
கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள்
உங்கள் லட்சியத்தை வழிநடத்த ..............

உடன் ரத்தம் அழும், உறவு அழும்
ஊரார் அழுவார்
உனக்காக உலகமே அல்லவா
அழுது கொண்டிருக்கிறது ...............

அதனால் மனிதர்களின் மகுடமாய் வாழ்ந்த
கலாம் உமக்கு எங்களுடைய
இதயபூர்வ சலாம் .............


கவிஞர் சுந்தர வினாயகமுருகன் . புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (1-Aug-15, 9:15 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 63

மேலே