மதுவின் மரண வேட்டை
எத்தனையோ உயிர்களை தின்ற பின்பும்
மீண்டும் மீண்டும் டாஸ்மாக்
கேட்கிறது உயிர்பலி ........
அரசாங்கத்தின் அலட்சியத்தில்
ஆயிரம் ஆயிரம் அநாதை பிள்ளைகள்
அகோர விதவைகள் ............
விபத்து தடுப்பில் விழிப்பாய்
இருக்கிறதாம் அரசு
மது மரணத்தில் மட்டும் ஏன் மந்தம் ?
கண்ணை மூடிக்கொண்டு
உலகமே இருண்டதென்று
கூறும் ஏமாற்று அரசியல் வாதிகள் ............
மயக்க மடையர்களின்
மது வெறிக்கு அராசங்கம் போடுகிறது
வருமான வலை ......
திருந்தாத ஜனநாயகத்தில்
போராடி தோற்றுப்போகிறது
எத்தனையோ நல்லவர்களின் தியாகம் .......
இருந்தும் மரணத்தின் வேட்டையில்
மாற்றுகருத்தில்லை மதுவிற்கு !
கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை
தலைவர் . மது ஒழிப்பு இயக்கம் , புதுவை