காலம் வென்ற கலாம்

தான் தலைவர் என்று சொல்லாத நீர்
ஒருவரே தலைசிறந்த தலைவர்,
தன்னை விஞ்ஞானி என்று பெருமைகொள்ளாத நீர்
ஒருவரே முக்காலமும் உணர்ந்த ஞானி,
நான் தான் அறிவாளி என்று காட்டாத நீர்
ஒருவரே அறிவியலின் அனையா தீபஒளி,
தன் இறப்பை சரித்திரமாக்கி,
உங்கள் இழப்பை இந்தியர்களுக்கு உரிதாக்கி,
பல களங்களில், நீங்கா தடம் பதித்து,
மக்கள் மனங்களில் நிரந்திர இடம்பிடித்து,
சோதனை களங்களை சாதனை களங்களாக்கி,
விண்ணுலகம் சென்ற ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களே.....!

வல்லரசு என்று வலுவாய் நல்லரசு செய்த,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியே...!
இளைஞர்களின்,
இன்னாள் சேனாதிபதியே...!
விண்வெளியில்,
இந்திய வழி சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டிய,
நம் பாரத தாயின் புதல்வரே...!
பல ஏவுகணைகளை அனுப்பியதின் மூலம்,
மண்ணுலகத்தில் எந்திரனாகவும்,
விண்ணுலகத்தில் இந்திரனாகவும்,
நாசாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,
இராமேஸ்வரத்தில் இருந்து ஏவுகணை நாயகனாய் வலம் வந்தவரே....!
அக்னி சிறகுகள் கொண்டு- ஏன்?
விண்ணுலகத்திற்கு சென்றுவிட்டாய்...!
2020 என்ற உங்கள் கனவு,
20-20 போன்று இல்லாது,
கடமை உணர்ச்சியுடன்,
நேர்மையுடன் - மலர
நாங்கள் முயற்சிக்கிறோம்
நீங்கள் கடந்து காட்டிய பாதையில்....!
மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
அவர்களின் ஆத்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிராத்திக்கிறோம்...!
நீங்கள் அருகில் இல்லை என்றாலும்,
எங்கள் நினைவில் என்றென்றும் வாழ்கிறாய் இளைஞர் சக்தியாக.......
இப்படிக்கு.,
எழுத்தாளன்,
கா.ச.மருதநாயகம்,

எழுதியவர் : கா.ச.மருதநாயகம் (1-Aug-15, 11:02 am)
சேர்த்தது : maruthanayagam @ senthilvelavan
பார்வை : 142

மேலே