பள்ளிப்பருவம்
தாய் கைபிடித்து கூட்டி வந்து,
கல்வித்தாயிடம் தாறை வார்த்து
தைரியமாய் விட்டு சென்ற தருணம்,
ஜாதிமதபேதமின்றி அன்புசண்டை,
கலப்பு சாப்பாடு,
கலர் கலராய் ரப்பர்,
பாடத்தை பாட்டாய் படித்து இசையமைத்தது,
மணி அடிக்க காத்திருந்த தருணம்,
திங்களில் கடவுள் வாழ்த்து,
மாலையில் பீ.டீ.வகுப்பு,
சோலைவனத்தில்,
கல்விகற்று..,
பிரம்படி வாங்கினாலும் வலிக்காத மாதிரி நடித்தது.....!
கூடவே நான்கு நண்பர்கள்,
பரீட்சைக்கு முன் அர்சனை செய்தது..,
கொலைகாரன்,
மோசக்காரன்,
திருடன்,
தீவரவாதி,
இவர்கள் எல்லாம்
இங்கு வந்திருந்தால்....
மதச்சண்டை மண்ணோடு போயிருக்கும்,
ஒற்றுமையை பார்த்திருப்பான்.....
ஒரே வண்ண சீருடையில் மட்டுல்ல...
கபடம் இல்லா குணக்காரர்களை கண்டு....!
பெரிய பெரிய
தொழில்அதிபர்களும்,
அறிவாளிகளும்,
திரும்ப கிடைக்க ஏங்கும் பருவம்,
எனக்கு கிடைத்த அந்த பள்ளி பருவம்.....!
இப்படிக்கு,
கா.ச.மருதநாயகம்.