நன்மதி வெண்பா - நூல் - பாடல் 91
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
அம்முகமன் கூறா அரசனிடந் தொண்டுசெயின்
இம்மையம்மை யில்லையெங்ஙன் என்னிலோ - கம்மும்
இருணிறையும் இல்லில் இருகைத் தடவித்
திரியலென நன்மதியே தேர்! 91