காற்றின் வழி

ஒரு பயணத்தின் சுகந்தத்தில்
முகமுரசிய காற்றை
உயிர்வரை உள்ளிழுத்து
கண்மூடி லயிக்கையில்
எப்போதும்போல்
இப்போதும்
அறியவில்லை
அகஅழுக்குகளையும்
அக்காற்று அதன்வழி
எடுத்துச்செல்லுமென்று...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்