நெடுஞ்சாலை பூங்கூட்டம்
சாலையோர பூக்கள்
கொதிநிலையில் நீர்குடித்து
கொத்து கொத்தாய் பூக்கள் தந்து
வழிப்போக்கன் கண்களுக்கு
வரவேற்ப்பும் வாழ்த்தும் தந்து
கரியமில வாயு குடித்து
கரும்புகையால் ஒப்பனை செய்து
சீவாத கொண்டையில் சிரிக்கின்ற
கொத்துப் பூக்கள்
தேன் குடிக்கும் சிட்டுக்கள்
தேடியுனை உறவில்லை
தன்மகரந்த சேர்க்கையால்
தரித்தன உன்னில் வித்துக்கள்
வெடித்துச் சிதறின வித்துக்கள்
வெங்கலத்தார்ச் சாலையிலே
அந்தோ !
அயர்ச்சி இல்லை பாதசாரிகளே!
ஏதுமறியாதது போல
இன்னொரு வசந்த காலம்
இனியும்
உன் கொண்டைகுலுங்கபூக்கள் !
நீங்கள் தான் உதாரண தியாகிகள்.