faizuraan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : faizuraan |
இடம் | : keeranur,Pudukkottai District. |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 8 |
Im a M.Sc Chem Gradurate.
Working as a Lab Tech Manager
Kavi Pidikkum.Nagaisuvai Pidikkum.Yathartha valzkkai Pidikkum.
Kakkan Vazkkai Pidikkum.Mohammed Nabi Arivurai Pidikkum.
Anbu irukkum idam Pidikkum
Atharavu thara pidikkum
Izagiya Manathenbathaal
Izhanthathu patri ninaikka mattum pidikkathu.!
ஆறாண்டாய் காய்ந்த பூமி ஆரக்குளிர்ந்தது !
மணற்குழிகள் மறைய மறையமழைபொழிந்தது!
வரப்போர துளசித்தூர்கள் துளிர்வெடித்தது!
வண்டலோடு திருடுபோன அயிரை உயிர்த்தது!
....
இருகிய முகங்களின்
இதழோர மகிழ்ச்சி
இதயங்கள் கொண்டாடும்
இனிய பொங்கல் திருநாள் மீட்சி!
சாலையோர பூக்கள்
கொதிநிலையில் நீர்குடித்து
கொத்து கொத்தாய் பூக்கள் தந்து
வழிப்போக்கன் கண்களுக்கு
வரவேற்ப்பும் வாழ்த்தும் தந்து
கரியமில வாயு குடித்து
கரும்புகையால் ஒப்பனை செய்து
சீவாத கொண்டையில் சிரிக்கின்ற
கொத்துப் பூக்கள்
தேன் குடிக்கும் சிட்டுக்கள்
தேடியுனை உறவில்லை
தன்மகரந்த சேர்க்கையால்
தரித்தன உன்னில் வித்துக்கள்
வெடித்துச் சிதறின வித்துக்கள்
வெங்கலத்தார்ச் சாலையிலே
அந்தோ !
அயர்ச்சி இல்லை பாதசாரிகளே!
ஏதுமறியாதது போல
இன்னொரு வசந்த காலம்
இனியும்
உன் கொண்டைகுலுங்கபூக்கள் !
நீங்கள் தான் உதாரண தியாகிகள்.
[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி
வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்
தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு
பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு
வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு
பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா
சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!
காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்
மலிவு விலையில் கிடைப்பதற்கு
காதலென்ன கத்தரிக்காயா....?
பாரம் தாங்காமல் நசுங்கிவிட
என் காதலென்ன தக்காளியா...
ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான் உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!
நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....
இரட்டை அர்த்தமுள்ள