காற்று வெளி

பச்சைய
முகடு பற்றி
பனித்துளி
முகம் துடைத்து
கொச்சகம்
கலையாக் கோடை
குளிர் சோலையின்
மலர்கள் தீண்டி
உற்சவத் தேர் சமைத்து
உலகெலாம்
உலவும் தென்றல்
அற்புதச் சுருதி
சேர்த்து
ஆனந்த இசையமைக்க
நர்த்தனம் ஆடிச் செல்லும்
நதி வழி வேர் பரப்பி
எச்சமாய் எழுந்து
நிற்கும்
அம் மூங்கில் காட்டினைக்
கடந்து செல்லும்....

எழுதியவர் : உமை (21-Aug-15, 4:29 am)
Tanglish : kaatrin mozhi
பார்வை : 154

மேலே