மூதாதையர்கள் நினைவாய்

               மூடநம்பிக்கை

காற்று வாங்க வெட்டவெளி
நடைபயிற்சியில் நான்
ரசித்தபடியே வியந்தபடியே
பசுமை நிறைந்த மனதோடும்
மரங்களோடும் காற்றோடும்
பேசிக் கொண்டே.....

மரங்களும்  என்னோடு 
நடவாமல் அசைந்து அசைந்து
பேசியபடியே...

முதலில் மாமரம் தன் கரங்களை
அசைத்து ஆடியபடி
என்னோடு குலுங்கும்
பழங்களைப் பறித்துக் கொண்டு 
என் பாரம் குறை என...

"இன்னும் நான் உனக்குத் தருவேன்" என ஆச்சர்யமாய்
நானும் மடி நிறைய
பறித்துக் கொண்டு நகர...

பத்தடி சென்றதும் 
வேப்பமரம் எனை அழைத்து ,
"அந்த பழங்களை எனக்கு கொடு
உன் நோய் தீர்ந்துவிடும் "என அசரீரியாய்...

திகைத்தேன்! வியந்தபடி
சிறிது நேரத்தில்
ஒரு சிலை செய்து
வேப்பம்பூ சூட்டி
அழகு படுத்தி பத்தடி நகர....

அரசமரம் எனை அழைத்தது.
ஏ மானிடனே!
உன் வம்சம் தழைக்கும் 
எனக்கு "ஒரு பிள்ளையார்
சிலையொன்றை வைத்துவிட்டு
செல் "என அதனையும்
நிறைவேற்றிவிட்டு நகர....

அடுத்த மரம் என்னிடம் 
எதையும் கேட்கவில்லை ..
வியப்படைந்தேன்!

உனக்கு என்ன வேண்டும்
கேட்டேன் வியப்பில்...

எனக்கு ஒன்றும் வேண்டாம்
"என் நிழலில் இளைப்பாறி செல் "என
 
நான் அயர்ந்து தூங்கிய பொழுது
மின்னலாய் என் முன்..

என்ன அதிசயம் !
என் கண் முன்னே 
அழகான தேவதை
"உனக்கு என்ன வேண்டும் கேள் "என

எனக்கு ஒன்றும் வேண்டாம் .
நாடு வளம் பெற
"நீ மழையை தந்தால் போதும் "என்றேன் .. 
மழை பெய்தது
நானும் வீடு சென்றேன் 
நிம்மதியாக ...

இப்போதுதான் புரிந்தது!
இயற்கை யைப் பாதுகாக்க
நமக்கு மூதாதையர் மூடநம்பிக்கையால் 
சிலைகளை வைக்கவில்லை என்று ...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-Aug-15, 9:59 pm)
பார்வை : 123

மேலே