நிழல் மட்டுமே உன் குடை கொடையோ

ஓங்கி உயர்ந்த பனை மரம்
ஒருத்தருக்கும் நிழல் தராது
விரிந்து பரந்த ஆல மரம்
எத்தனை பேர் வெய்யில் மழையைக் காக்கும்
உயரப் பனைமரம்
நொங்கு எனும் இனிய பனம் பழம் தரும்
ஆல விருட்சமே
நிழல் மட்டுமே உன் குடை கொடையோ
ஒருவேளை
ஞானப் பழம் தருவாயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-May-24, 7:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே