வீசும் வெப்ப அலை

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல், தற்போது வீசுகின்ற வெப்ப அலைக்கு காரணம் நாம்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வளர்ச்சி என்பது வீழ்ச்சிக்கு வித்திட்டு அடைவதில்லை. ஆனால், அதைதான் நாம் எல்லோரும் தப்பாமல் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், வருங்காலங்களில், சாலை ஓரங்களில் ஒதுங்குவதற்கு நிழல் தரும் மரங்கள் இல்லாமல் அவதிப்படுவது உறுதியாகிவிடும்.

அந்த காலத்தில் ராஜாக்கள் ஆட்சி புரியும்போது, மக்களின் நலன்களை மனதிலே கொண்டு, ஆங்காங்கே ஏரி குளங்களை அமைத்து நீர்வளம் சிறப்பாக இருக்க வேண்டும், விவசாயம் பெருகி பஞ்சம் பட்டினியின்றி மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட
வழி வகுத்தார்கள். மேலும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்தார்கள்.

நாம் சிறு வயதில், பள்ளி பாடப்புத்தகத்தில், அசோகர் குளங்களை அமைத்தார், சாலை ஓரங்களில் மரங்களை நட்டார் என்று படித்து இருக்கின்றோம். அன்று படித்ததை இன்று நினைவு கூர்ந்து, ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் நல்ல காரியம் இது மட்டுமே.
எல்லோரும் நன்கு சிந்தித்து செயல்படுவோம்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-May-24, 7:07 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : veesum veppa alai
பார்வை : 250

மேலே