பையன் எதுக்கெடுத்தாலும் பயப்படறான்டா

ஏண்டா மகனே உன்ற மகனுக்கு ஏண்டா இந்தப் பேரை வச்ச?

படிக்கிறதுக்குப் பயப்படறான், சோறு திங்கறபோது பயந்து பயந்து

சோத்தை வாயில அள்ளிப் போடறான். வீட்டுப் பாடம் எழுதறபோது

இங்கயும் அங்கயும் பாத்துப் பாத்துப் பயத்தோடவே எழுதறான்.

எதுக்கெடுத்தாலும் அவனுக்குப் பயம்டா. எல்லாம் அவனோட பேரு

ராசிதாண்டா. அவனுக்கு எதுக்குடா 'பயம்'னு இந்திப் பேரை வச்ச?


@@@@@@@@@@@@@@

நம்ம எட்டுப்பட்டி கிராமத்தில யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு

வைக்காத பேரை வைக்கணும் ஆசைப்பட்டு ஐயாயிரம் ரூபாயை

நம்ம் குடும்ப சோசியருகிட்டக் கொடுத்த அந்தப் பேரை வாங்கிட்டு

வந்து பெரிய விழா நடத்தி அந்தப் பேரை எம் பையனுக்கு வச்சேன்.

அது அவனுக்கு ராசி இல்லாத பேராப் போச்சு ஆத்தா. வேற இந்திப்

பேரை அவனுக்கு வைக்கணும்.

@@@@@@@@@@@@

டேய் மகனெ மண்ணாங்கட்டி தப்பித் தவறிக்கூடப் பையனுக்குத்

தமிழ்ப் பேரை வச்சிடாத. ஊருள நம்ம யாரும் மதிக்கமாட்டாங்க.

@@@@@@@@@@@@@

அதெல்லாம் எனக்குத் தெரியும் ஆத்தா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Payam = Message. Masculine name. Indian, Iranian origin

எழுதியவர் : மலர் (30-Apr-24, 7:37 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே