தெளிவுடன் சிந்திப்போம்

தெளிவுடன் சிந்திப்போம்

ஒரு இளம் மாலை பொழுதினில் குமரி கடற்கரையில் மண்ணை கால் விரல்கள் அளைந்தவாறு மிதித்துக் கொண்டு கால் நடை மூன்று கடலையம் நோக்கி கண் பார்வை நிலைத்து அந்த சூரிய அஸ்தமனத்தை காண துடித்து கொண்டிருக்கையில் நடந்த ஒரு மிக சுவையான அனுபவம் தான் பின்னே வரும் நிகழ்வு.
கடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது; வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத் தொடுமளவு நெருங்கி நின்றன. ஆழமற்ற நீர்ப்பரப்பினுள் நின்ற மணல்மேட்டிற்குப் பின், ஆழம் நிறைந்த கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன.

அவற்றுக்குப் பின்னே மீனவர்களின் - வலிமையான கயிற்றினால் கட்டப்பட்ட மரத்துண்டுகளாலான - கட்டுமரங்கள் தெரிந்தன. அவை ஈச்ச மரங்களுக்கு தெற்கேயிருந்த ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. சூரிய அஸ்தமனம் மிகவும் சிலாகிக்கத்தக்கதாய் இருந்தது; அது எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய திசையிலே நிகழவில்லை - மாறாக கிழக்கிலே நிகழ்ந்தது; அது ஒரு நேரெதிர் சூரிய அஸ்தமனம் ஆகும்.

மிகப்பெரிய மற்றும் பல வடிவங்களாலான மேகங்கள், நிறமாலையின் எல்லா நிறங்களாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. அது ஒரு மிகவும் அருமையான -அதே நேரத்தில், காண்போருக்கு ஒருவிதமான மயக்கத்தை உண்டாக்குகிற காட்சி. கடல்நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி, பின் அவற்றால் தொடுவானத்திற்கு ஒரு கண்கவரும் நேர்த்தியான பாதையமைத்திருந்தது.

வெகுச்சில மீனவர்கள் நகரத்திலிருந்து தங்கள் கிராமத்திற்கு திரும்பி நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். கடற்கரை ஏறக்குறைய வெறிச்சோடி, நிசப்தமாயிருந்தது. ஒற்றை நட்சத்திரம் மேகங்களுக்கு மேலே தெரிந்தது. நாங்கள் திரும்பி நடந்தபோது,. ஒரு பெண்ணின் கூக்குரல் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து வந்தது. நாங்கள் பதட்டமுடன் அங்கு சென்று அந்த வீட்டின் வெளியில் நின்று பார்த்தோம்.அங்கு ஒரு குடும்பம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி கொண்டிருந்தது.
எங்கள் மனம் ஆண்டவனை எண்ணி அவர்களது மனக்கவலையை தீர்ப்பதற்கு வேண்டிக் கொண்டு அவ்விடத்தில் ஒரு புறமாக நின்று நடப்பதை கவனித்தோம்.
"அங்கு நடு அறையில் நின்று அம்மா கத்திக்கொண்டிருந்தாள். அங்கு நின்றிந்த மகனிடம் அழுகையின் நடுவே விம்மிக்கொண்டே கூறினாள் டேய் உன் தங்கச்சிக்கு பேய் பிடிச்சிருக்குடா! ", என்றாள் கௌரி அம்மா. அவள் மகன் கல்லூரி விடுதியில் இருந்து பல நாட்கள் கழித்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தான்.அவனிடம் கௌரி அம்மா
" அட போம்மா! இந்த காலத்திலே இதை எல்லாம் நம்பிண்டு இருக்கையே உடனே அதை விட்டு தள்ளாமல் , என்றவன் தன் தங்கையைத் தேடினான்.
" டேய்! நீ சொன்னா நம்ப மாட்டே போய் ! உன் ரூம்ல பாரு. ",என்றாள் அம்மா.
தனது அறையின் கதவைத் திறந்தான் ராகவன் .
அங்கு தன் தங்கை கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தவன், " வர வர உங்க காட்டுமிராண்டித்தனத்திற்கு அளவே இல்லாமல் போச்சு. ", என்று தன் அம்மாவை கோபமாக திட்டிக் கொண்டே தான் தங்கையின் கை கால்களை அவிழ்த்துவிட்டான். " ஹேய் நிஷா! உன் அண்ணா வந்திருக்கேன். கண்ணைத் திறந்து பார். ",என்றான்.
கண்ணை திறந்து பார்த்த நிஷா, " அண்ணா! வந்துட்டியா? எனக்காக என்ன வாங்கிண்டு வந்தே ? ",என்று சகஜமாக பேசியவள், திடீரென அந்த அறையின் மூலையில் கோணப்பகுதியை பார்த்து பயந்தாள்.இதை பார்த்த ராகவன் நிஷா என்ன ஆச்சு என்று கேட்க அண்ணா அங்கே பாரு அந்த பெண் என்னை பார்த்து சிரிக்கிறா அவ கையிலே ஒரு பளபளப்பான கத்தி வேற இருக்கு என்னை நோக்கி வாரா அண்ணா எனக் கூறிக்கொண்டே தன்னை நடுக்கத்துடன் மறைத்து கொண்டாள்.
ராகவனின் கண்ணுக்கு அங்கு யாரும் தெரியவில்லை.
ஆனால் நிஷாவின் பயம் அதிகரிப்பதை அவளுடைய முகம் காட்டியது.
திடீரென நின்று தன் அண்ணன் ராகவனை வெளியே போகச் சொல்லிக் கெஞ்சினாள்.
ராகவனுக்கு நிஷாவின் நடவடிக்கை விசித்திரமாகப்பட்டது. அவன் அவளை கவனித்தபடி நின்றான்.
நிஷாவோ ,அந்த அறையின் கோணப்பகுதியை நோக்கி, " என் அண்ணனை ஒன்னும் பண்ணிடாதே ! நான் அவனை போகச் சொல்லிடுறேன். ",என்று கெஞ்சினாள்.
சட்டென கெஞ்சுவதை விட்டு, ராகவனை நோக்கி திரும்பினாள்.
வேகமாக வந்தவள், " வெளியே போடா. ",என்று வேகமாக அவனை வெளியே தள்ளி கதவை உள்ளப்பக்கம் தாளிட்டுக்கொண்டாள்.
ராகவன் தன் அம்மாவைப் பார்த்தான்.
" நான் தான் சொன்னேனே . அவளுக்கு பேய் பிடிச்சுருக்குன்னு. நீ தான் கேட்கல. ", என்றாள் கௌரி அம்மா.நம்ம பூசாரிக்கு மேலே அம்மன் வந்து அவளுக்கு பரிகாரம் சொல்லி அவளை 90 நாட்கள் உள்ளேயே வைக்க சொல்லி இருக்கு அதனாலே தான் இப்படி வைத்தோம் எனக்கு மட்டும் அவளை கட்டிப்போட்டு பார்க பிடிக்கலை என்ன பண்ணுவது.
" நீ சொல்லுறது ஒரு விதத்தில் உண்மை தான் அம்மா. தங்கச்சியின் மனதில் பயம் என்கிற ஒரு பேய் தான் பிடிச்சுருக்கு. ",என்று கூறிவிட்டு நான் இப்ப வருகிறேன் என்று வெளியே வெளியே கிளம்பினான்..
கௌரி அம்மாவுக்கு அவன் சொன்னது புரியவில்லை. ராகவன் மனோதத்துவ இயல் படிக்கும் மாணவன்.
அவன் தங்கை +2 முடித்துவிட்டு வீட்டில் அம்மாவிற்கு உதவியாக இருந்தாள்.
ராகவனின் அப்பா ஒரு விவசாயி.அவர் வீட்டில் வாழ்ந்ததைவிட வயக் காட்டில் வாழ்ந்தது தான் அதிகம். கௌரி அம்மா படிக்காதவ. பள்ளி கூடத்தில் படிக்கும் வயதிலேயே கல்யாணம் நடத்தி அவளுடைய படிப்பிற்கு வழி அடைத்து விட்டனர் அவளின் பெற்றோர்கள்.
ராகவன் வெளியே சென்ற சிறிது நேரத்தில் அவன் அப்பா வீட்டிற்கு வந்தார்.
ராகவன் வந்ததையும், அவன் சொன்னதையும் அவரிடம் கௌரி அம்மாள் சொல்லிட ,ராகவனின் அப்பா அவனுக்கு என்ன தெரியும் நம்ம பூசாரி மேல் கோவிலில் உள்ள அம்மன் வந்து கூறியதை நீயும் தானே கேட்டே என பெரும் குரலில் கூறினான். பூசாரி மேல் வெள்ளி கிழமை பூஜை முடிந்ததும் அம்மன் வந்து குறி சொல்வதும் அந்த ஊர் மக்கள் துன்பங்களை தீர்ப்பதும், நன்மைபெற வழி கூறி அதன் பயனாக அவர்களது துன்பங்கள் தெளிவதும் அம்மன் அடுத்த முறை வரும் பொழுது அதைச் சொல்லி கேட்டு அவர்களை ஆசீர்வதிப்பதும் வாரம் தோறும் நடைபெறும் நிகழ்வு தான்.பூசாரிக்கு இந்த நடப்புகள் யாவும் அவர் உடம்பில் இருந்து அம்மன் விலகிய உடன் மறந்து போய் பின்னர் அடுத்த முறை அம்மன் பேசும் பொழுது மீண்டும் கூறுவதும் கிராமத்து மக்களை அவர் மீது மரியாதை கொடுக்க வைத்தது.அவர் கூறினால் அதை மாறாமல் செய்வது தான் வழக்கம் இதனால் தான் தனது மகன் கூறி சென்றதை அவன் தந்தை கடுமையாக கண்டித்து கத்தினார். .
அவருக்கு மகன் ராகவன் விவசாயத்தை பார்க்காமல் வெளியே படிக்க சென்றது அவ்வளவாக பிடிக்கவில்லை. எனக்கு உதவி செய்யாமல் எதோ மனோதத்துவம் படிக்கிறானாம் என்று கேலியாக கூறி என் மகளுக்கு வைத்தியம் பார்க்கறானோ என கூவினார். நம்ம அம்மனைவிட அவனுக்கு எல்லாம் தெரியுமோ என கோபத்துடன் அவர் கூறியதை கண்டதும் அங்கு நின்ற எங்களுக்கும் பதட்டம் அதிகமாகியது.
மாலை ஐந்து மணி இருக்கும்.வீட்டிற்கு வந்த ராகவன் , குளித்துவிட்டு, ஆடை மாற்றி அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, தன் தங்கையின் அறைக் கதவை மெல்லத் தட்டினான்.
கதவு திறந்து கொண்டது, உள்நோக்கி நகர்ந்தது.அவன் உள்ளே நுழைய
அறை முழுவது சற்று இருட்டாக இருந்தது.
மின் விளக்கு சுவிட்ச்சை தேடிப் பிடித்து ஆன் செய்தான்.
விபூதியைக் கையில் எடுத்தவன் தனது தங்கச்சியின் நெற்றியில் பூசினான். அவளிடம் உட்காரச்சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று அங்கு அம்மா செய்து வைத்திருந்த உணவை தட்டில் எடுத்து வந்தான்.தன் தங்கைக்கு ஊட்டிவிட்டான்.உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிய,தட்டில் கையை இரகு கழுவ, கௌரி அம்மா வந்து தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள் .
சிறிது நேரம் நிஷா அமர்ந்து இருந்த பின் தன் அண்ணன் மடியில் தலை வைத்து படுத்தாள்.சற்று நேரத்தில் தூங்கிப்போனாள். அவள் நல்ல முழு தூக்க நிலைக்கு சென்ற பிறகு, ராகவன் தான் கற்ற படிப்பைப் பரிசோதனை செய்து பார்க்க எண்ணி, தன் மனதை அமைதி நிலைக்குக் கொண்டு சென்று தன் தங்கையின் ஆழ்மனதில் கூறினான்.
" நீ பயப்படாமல் இருந்தால் போதும்.அந்த பேயால் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. ", என்று அழுத்திக் கூறி அவள் மனதில் நம்பச் செய்தான்.
அன்றிரவு நிஷா நன்றாக உறங்கினாள்.
காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு, சமையல் வேலையை செய்தாள்.அதைக்கண்ட கௌரி அம்மாவிற்கு மிக ஆச்சரியமாகத் தோன்றியது. மூன்று மாதங்களாக நிஷாவிடம் காணாத ஒரு மாற்றத்தை கண்டாள். அன்று காலை சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற ராகவன் " ஓம் ",என்றொலிக்கும் ரேடியோவை வாங்கி வந்து வீட்டில் வைத்து ஒலிக்கச் செய்தான்.
கௌரி அம்மாவிற்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.
நம்மிடம் டாக்டருக்குப் படிப்பதாகச் சொன்னானே.
ஒருவேளை சாமியாராகி விட்டானோ என்று கூட யோசித்தாள்.
அன்றிலிருந்து நிஷா முன்பை விட சுறுசுறுப்பாகவும், தைரியமாகவும் இருக்க தொடங்கினாள்.
அவளை பிடித்திருந்த பயம் என்ற பேய் அறவே அழிந்து போனது.
அந்த பயம் அவளை மீண்டும் பிடிக்காமல் இருக்க, " ஓம் ", என்ற ஒலி அவள் காது வழி மூளையில் பதிந்துவிட்டது.
இனி அவளை பயம் என்ற பேய் பிடிக்க வாய்ப்பில்லை.
" ஓம் ", என்ற ஒலியால் நிஷாவிற்கு மட்டுமல்ல வீட்டில் எல்லோருக்குமே நேர்மறையான எண்ணங்களில் இருந்து மாற்றங்களை மனதில் தந்தது.
எதிர்மறையான நம்பிக்கை நம்மை நெருங்காதிருக்க நேர்மறையான நம்பிக்கை நமக்கு அவசியம் துணையாகிறது.
என்னை பொருத்தவரை, " ஓம் ", என்ற ஒலி மதங்களைக் கடந்தது.இயற்கையிருந்து உருவானது.
என்னுடைய மனதை தீயவை அண்டாதிருக்கத் துணையாக தியானம் செய்ய ஏதுவாக இருப்பது இந்த " ஓம் ".என்ற ஒலி மனதில் நிறைந்து இருப்பது தான்.
குழந்தைகளிடம் பேய்க்கதைகள் கூறி பயம் என்கிற உணர்வை வளர்பபதைவிட உன்னதமானது குழந்தைகள் மனதில் பேய் என்ற பயத்திற்கு இடமளிக்காத அளவுக்கு நேர்மறையான எண்ணங்களை நிரப்புங்கள்..
நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவியாக இருங்கள். நல்லவைகளை கேட்கும் பொழுது தீய எதிர்மறையான எண்ணங்கள் மறையும் . இந்த செயலால் இது நேர்ந்தது இவர்கள் வந்ததால் நமக்கு தீமை விளைந்தது என்ற எண்ணங்கள் வரும் பொழுது அதை மாற்றி நல்லவைகளை மட்டும் எடுத்து கொள்ள வழி அமையுங்கள்.குழந்தைகள் நன்றாக வளர்ந்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வழி அமைப்போம்.
என் மனதில ஒலித்த பாடல் வரிகள் புன்னகையை வரவழைத்தது
வேப்பமர உச்சியிலே பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாட போகும் பொது சொல்லிவைப்பாங்க
உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாக கூட நம்பிவிடாதே
நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பிவிடாதே
சின்ன பயலே சின்ன பயலே சேத்தி கேளடா

எழுதியவர் : கே என் ராம் (30-Apr-24, 4:27 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 53

மேலே