பிரபல ரவுடிக்கு கொலை மிரட்டல்

அண்ணே உங்க வீட்டுக்கு முன்னாடி இரண்டு காவலர்கள் துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கிறாங்க.

@@@@@@@@@@@

எல்லாம் என்னுடைய ஏற்பாடுதாண்டா சின்னக்கண்ணா.


@@@@@@@@@@


என்ன அண்ணே சொல்லறீங்க?

@@@@@@


நான் ஒரு அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறது

உனக்குத் தெரியாதா?

@@@@@@@

தெரியும் அண்ணே.

@@@@@@

அரசியல் கட்சில முக்கியப் பொறுப்பில இருக்கிறதால அடிக்கடி

செய்தித்தாள்கள்லயும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலயும் என்னப்

பத்தி செய்தி வந்துட்டே இருக்கணும். அப்பத்தான் எனக்கு இப்ப

நான் வகிக்கிற பதவியைவிடப் பெரிய பதவியாக் கிடைக்கும்.

அதுக்குத் தான் என் சொந்தக் கிராமத்துக்குப் போயி அங்கிருந்து

எனக்குக் கொலைமிரட்டல் இருக்குதுன்னு காவல் தலைமை

அலுவலகத்துக்கு எங்க பாட்டி செல்பேசிலிருந்து தகவல் சொல்லிட்டு

அந்த சிம் கார்டை உடைச்சுப் போட்டுட்டு பாட்டிக்கு வேற சிம்

கார்டு வாங்கிக் கொடுத்துட்டேன். இப்பப் பாரு எனக்கு காவலர்கள்

பாதுகாப்பு. நாளைக்கு இது தான் முக்கிய செய்தியா இருக்கும்.

அடிக்கடி விளம்பரத்தில வர்றவங்கதாண்டா தலைவர் ஆகமுடியும்.

நான் நாளைய தலைவர்டா சின்னக்கண்ணா.

@@@@@@@

அண்ணே நீங்க இப்பவே தலைவர் ஆகிட்டீங்க அண்ணே,

எழுதியவர் : மலர் (29-Apr-24, 9:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 38

மேலே