நிமிர்ந்துநில் நெஞ்சே
என்றோ நீ பேசிய
ஏளனச்சொல்லின்
எதிரொலிகள்
என்னுளெனை
எரித்துக்கொண்டிருக்க...?
இயல்பாய் வந்து
இன்முறுவலித்தாய்
பழையன மறவென்று...!
முகநட்பு பாராட்டி
முதுகில் குத்திய
மனிதர்களைவிட ...
நெஞ்சில் குத்திய
உன் நேர்மை
பிடிக்குமெனக்கு...!
தூரத்திலே...
உனைரசிப்பேன்
பக்கமெனில்
பரவசம்தான்...
நான்...
முன்புபோலில்லை
முகத்தில் மட்டுமல்ல
முதுகிலும் புதிதாய்
முளைத்துவிட்டன
கண்கள்...
ஆனாலும்
நெஞ்சு நிமிர்த்தியே
நிற்கிறேன்
நாளும்...!
------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்