ஊஞ்சல்
மாடத்தில் வைத்திருந்த
பீடியை எடுத்து வந்து கொடுத்தால் ..
பத்து நிமிஷம் ..
ஊசியில் நூல் கோர்த்துக் கொடுத்தால்..
பத்து நிமிஷம்..
நந்தியாவட்டை பூக்களை பறித்து
வந்து அவர் கண்களுக்கு கொடுத்தால்..
பத்து நிமிஷம்..
அவர் வீட்டு ஊஞ்சலில் ஆட..
அனுமதிக்கும்..
முருகேச மாமா..
(அப்படித்தான் எங்கள் தெரு
சிறுவர்கள் அழைப்போம்..அவரை )
அவரை விட்டு விலகிப்போன
மனைவியை எண்ணியே
தனியாகவே இருந்து
குடித்துக் குடித்தே..
செத்துப் போனார் ..
அந்த ஊஞ்சலிலேயே..
ஏனோ..
அதற்கப்புறம் ..
இந்த நாற்பது ஆண்டுகளாக..
எந்த ஊஞ்சலிலும்
நான் ஏறியதே இல்லை..