அநேகமாக

அநேகமாக ..
அவள் பள்ளி சென்று திரும்பும்
வழியில்...
எங்காவது ..ஓரிடத்தில்
அவளது ஒற்றைப் பார்வை
சந்திப்புக்குப் பின்னரே
திரும்புவது வழக்கம்..

அநேகமாக
அவள்
என்னைத்தான் விரும்புகிறாள் ..
என்று..
எண்ணிக்கொண்டு..
நெஞ்சுக்குழியில்
ஒரு அடைப்போடு நான்
பேசிய ஞாபகம்..

அநேகமாக
இன்னொருவரைத்தான்
அவள் விரும்பினாள்..
என்பதும்..

அநேகமாக..
ஏதோ பிணக்கு ஏற்பட்டுத்தான்
பிரிந்து விட்டார்கள்
என்பதும்..

அநேகமாக ..
யாருக்கோ இரண்டாம்தாரமாக
வாழ்க்கைப்பட்டு..
எங்கோ..
சென்னைப்பக்கத்தில்தான்
வாழ்கிறாள் ..
என்பதும்..

தெரிந்தாலும்..

அநேகமாக..
எனக்கு எதுவும் தெரியாது
என்றுதான் ..
என்னை சேர்ந்தவர்கள்..
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
இன்று வரை ..!

எழுதியவர் : கருணா (5-Aug-15, 10:23 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : anegamaaga
பார்வை : 58

மேலே