பாவம்அவங்க

ரத்னா மேடத்திற்கு
ஆங்கிலம் சொல்லித் தந்தது
யாரென்றோ..
அவர்கள் எதற்காக
ஆங்கிலத்தில் இலக்கியம்
முதுகலை பட்டம் பெற்று..
யாருக்காக..
அதே கல்லூரியிலேயே
குறைந்த சம்பளத்திற்கு
லெக்சரராக இருந்தார்களோ..
அல்லது..
எதற்காக..
கல்யாணமே செய்து கொள்ளவில்லை..
என்பதோ..
எதுவுமே யாருக்கும் தெரியாதபோது ..
எனக்கு மட்டும் தெரியும்..
ஆனால்..
அவர்கள்தான் என்னிடம்
சத்தியம் வாங்கிக் கொண்டார்களே..
யாரிடத்திலும் சொல்லக் கூடாது என்று ..
பாவம்..
ரத்னா மேடம்..
ரொம்ப நல்லவங்க..
ஹூம்..
நீங்க போய்..
உங்க வேலையைப் பாருங்க..!

எழுதியவர் : கருணா (5-Aug-15, 10:37 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே