வென்றிடுவோம் வீர இளைஞர்களாய்
அக்னிச் சிறகுடையவராய்
அறிவுக் களஞ்சியமாய்
ஆற்றல் நிரம்பியவராய்
ஆளப் பிறந்தவராய்
இராமேசுவர மைந்தராய்
இந்தியாவின் முதல் மகனாய்
ஈர நெஞ்சினனாய்
ஈகைப் பெரு வள்ளலாய்
உள்ளத்திலே குழந்தையாய்
உயரம் பல தொட்டவராய்
ஊக்கமே உயிர் மூச்சாய்
ஊர் போற்ற வாழ்ந்தவராய்
எளிமையின் மறுபெயராய்
எல்லோர் மனம் கவர்ந்தவராய்
ஏராளமாய் கௌரவம் பெற்ற
ஏவுகணை நாயகனாய்
ஐயமற்ற மனதுடன் நம்முள்
ஐக்கியமாகிவிட்ட ஜோதியாய்
ஒரு மனமும் நோகாமல்
ஒற்றுமை ஓங்கச் செய்தவராய்
ஓயாமல் ஓடி உழைத்து நிரந்தர
ஒய்வைத் தழுவிக் கொண்டவராய்
ஒளவை வழியில் தனி மனிதனாய்
ஒளடதமாய் நாட்டைக் காத்தவராய்
எஃகு உறுதி கொண்ட
நம் அப்துல் கலாம் ஐயாவை....
எந்நாளும் நம் நெஞ்சிருத்தி
விழித்தே கனவுகள் பல கண்டு
வென்றிடுவோம் வீர இளைஞர்களாய்...!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்