எதை சாதித்தாய் - கலாம்

எழுத இயலவில்லை
நீ எழுந்து வா
அய்யா உன்
ஏவுகணையை என் இதயத்துள்
பாய்த்து விட்டு சென்றாயே
மதங்கள் எல்லாம்
ஒன்று கூடி
மனிதம் போற்றுகிறது
பார் எழுந்து ஒரு முறை பார்
எதை நீ சாதித்தாய்
என
ஆசிரியரை கண்டால்
எழுந்தோடும் மாணவர்கள்
கால் வலிக்க காத்திருக்கும்
அதிசயத்தை ஒரு முறை
எழுந்து பார் நீ
எதை சாதித்தாய் என
அரசியலுக்கு கூடி
ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்
எல்லாம்
அமைதியாக வீற்றிருக்கும்
கோலத்தை ஒருமுறை பார் நீ
எதை சாதித்தாய் என
எதிரியே இல்லா
மனிதனாய் நாட்டை
எழுந்து நிற்க வைத்த
ஞானியாய்
நல்ல கனவுகளை
தந்த விழிகளாய்
நீ சாதித்தது என்ன
பார் ஒருமுறை எழுந்து பார்
போதுமென நினைத்தாயா
போக நேரம் குறித்தாயா
போ நீ கண்ட கனவு
நினைவாக்க நாம் உண்டு
நீ போ
கலாம் அய்யா உனக்கு
சலாம் அய்யா