இவரே கலாம்

கலாம்
திசைகள் எட்டையும்
தன்னகத்தால் திரும்பி
பார்க்க வைத்த
தென்னகம்.
கலாம்
உறங்காமல் கனவு
கண்டு தன்னோடு
நாட்டையும் முன்னேற்றிய
குலாம்.
கலாம்
வாலிபத்தின் மேல்
நம்பிக்கை வைத்த
வயது முதிர்ந்த
வாலிபம்.
கலாம்
செல்லூலாய்ட் காலத்திலும்
சாமனியனுக்கு சளைக்காமல் ஊக்கமாய் பதில்
கடிதம் அனுப்பிய
நிசாம்.
கலாம்
ஒய்விலும் ஒயாது
ஊருக்கு உழைத்து
பல பழுதானவர்களை
'ஓ' வென வியப்பொலி
எழுப்ப வைத்த
முலாம்.
கலாம்
மதத்தை தன்
வீட்டிலே நிறுத்தி
மனிதத்தை இம்மாநிலம்
முழுவதும் கடத்திச்
சென்றதால் வாங்குகிறார்
இன்று பட்டாளத்துச்
சலாம்!!