மனதில் பட்டவை சத்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனதில் பட்டவை சத்யா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 83 |
கலைகளின் காதலன்.
நல்லதொரு கவிதை
படைக்கும் முயற்சியில்...
”இன்னைக்குனு பாத்து இவ்வளவு லேட் ஆயிடுச்சே! எல்லாம் இந்த மேனேஜர் சனியானால வந்தது!”
“அப்பாடா! இன்னைக்கு தான் ரொம்ப சீக்கிரமா சாப்பிட்டு வந்திருக்கோம்!
“பிரேம்குமார் மெஸ்ல சாப்ட்ட லெமன் சேவ நல்லாவே இல்ல. நெளி நெளியா புழு மாதிரி! நெக்ஸ்ட் டைம் அத சாப்பிடவே கூடாது.
”ஆயிரம் தான் சொல்லு! நம்ம பிரேம்குமார் மெஸ் லெமன் சேவ மாரி வருமா? வராது. வரவே வராது! நாளைக்கு நைட்டும் அதான் சாப்பிடுறோம்!”
”யாரு இவன் பின்னாலேயே வர்றான்?”
“யாரு பா இந்தப் பொண்ணு! நமக்கு முன்னாடி போகுது!
”ஆளப் பாரு! மீசையும் தாடியும் வச்சிக்கிட்டு!! ரவுடி மாரி! பாக்க சகிக்கல!”
"பொண்ணுங்களுக்கு, தாடி வச்சப் பையனத் தா
உன் சின்னப் பார்வையில்
என்னிதழ் விரிகிறது.
பகலவன் பார்வையில்
விரியும் மொட்டாய்!
உன் கன்னக் குழியில்
என்னகந்தை தொலைகிறது.
பெர்முடா முக்கோண சுழியில்
தொலையும் கலமாய்!
உன் கைத் தட்டோசையில்
என் மனம் ஆரவாரமாகிறது.
அமைதியான ஆழியில்
ஆரவாரமான அலைகளாய்!
உன்னிரு கால்களில்
என் முகம் உதைபடுகிறது.
விளையாட்டுத் திடலில
உதைபடும் கால்பந்தாய்!
உன் இனிய வரவினால்
என் வயது குழந்தையாகிறது.
ஒருவழிப் பாதையில்
எதிர்வரும் ஊர்தியாய்!
"யாரால் இவள்
கைம்பெண்ணானாள்?"
வெண்ணிற இரவுகளில்
என்னுள் எழும்
கேள்வி!
உன் சின்னப் பார்வையில்
என்னிதழ் விரிகிறது.
பகலவன் பார்வையில்
விரியும் மொட்டாய்!
உன் கன்னக் குழியில்
என்னகந்தை தொலைகிறது.
பெர்முடா முக்கோண சுழியில்
தொலையும் கலமாய்!
உன் கைத் தட்டோசையில்
என் மனம் ஆரவாரமாகிறது.
அமைதியான ஆழியில்
ஆரவாரமான அலைகளாய்!
உன்னிரு கால்களில்
என் முகம் உதைபடுகிறது.
விளையாட்டுத் திடலில
உதைபடும் கால்பந்தாய்!
உன் இனிய வரவினால்
என் வயது குழந்தையாகிறது.
ஒருவழிப் பாதையில்
எதிர்வரும் ஊர்தியாய்!
மெய்மேல் ஒன்றிய உயிர்,
மெய்யால் உண்டான ரணம்
மெய்யை நீங்கிய உயிர்!
மெய்யின் தத்துவம் தமிழ்!!
கவிராஜன்,
தன் செல்லக் குழந்தைக்கு,
செல்லம்மாள் ஈன்ற குழந்தைக்கு, அஃறிணைகளை அறிமுகப் படுத்த,
மலையாளிகளின் தேசமாம்,
திருவனந்தபுரம் விலங்கு காட்சி சாலைக்கு,
இட்டுச் சென்றான்.
ஒவ்வொரு விலங்கையும்
சுட்டிக் காட்டிய கவிராஜன்,
அவற்றின்
இயல்பை விளக்கிக் கூறி,
தன் குழந்தையோடு குழந்தையாய்
குதுகலித்து,
பேரானந்தம் கொண்டான்.
அவ்வாறு விளக்கி வருகையிலே,
அடங்காச் சிங்கம் ஒன்று,
கூண்டிலே சிறைப்பட்டு
அடங்கியிருத்தலைக் கண்டான்.
"காக்கை குயில்கள் எங்கள் ஜாதி!”
என்று சமத்துவம் பேசியவன்,
வனராஜனைக் கண்டால் சும்மா விடுவானா?
“தனக்கு சமமானவன்
இவன் என்றெண்ணி,
கட்டித் தழுவி,
ஆலிங்கனம் செய்ய”
அறிவை மழுக்கும் மருந்து.
ஆணவம் கரைக்கும் மருந்து.
இளைஞனுக்கு இனிப்பு மருந்து.
ஈன்றவனுக்கு கசப்பு மருந்து.
உலகை ஆளும் மருந்து.
'ஊ'வால் ஈர்க்கப்படும் மருந்து.
எட்டாவது அதிசயமான மருந்து.
ஏழைக்கும் கிடைக்கும் மருந்து.
'ஐ' யால் தொடங்கும் மருந்து.
ஒப்பனையில் ஈடுபடவைக்கும் மருந்து.
ஓரவிழியால் ஊக்குவிக்கப்படும் மருந்து.
ஔவையால் உதவப்பட்ட மருந்து.
நான் பார்த்த பார்வைகளில்,
உன் முகம் சங்கராபரணம்!
நான் மோகித்த இரவுகளில்,
உன் நினைவு ஹிந்தோளம்!
நான் கொண்ட காதலில்,
உன் அழகு ஆனந்த பைரவி!
நான் காதலைச் சொல்கையில்,
உன் நாணம் சகானா!
நான் சொல்லும் துணுக்குகளில்,
உன் சிரிப்பு காம்போகி!
நான் தரும் ஆச்சர்யங்களில்,
உன் மொழி சாரங்கா!
நான் மதி இழக்கையில்
உன் மதி பிலஹரி!
நான் வெற்றி பெறுகையில்,
உன் உவகை கல்யானி!
நான் கோபம் கொள்கையில்,
உன் நிதானம் ஸ்யாமா!
நான் தவறு செய்கையில்,
உன் கோபம் ஆரபி!
நான் அச்சப் படுகையில்,
உன் தைரியம் அட்டானா!
நான் அழ நேர்கையில்,
உன் தோள் தோடி!
நான் நம்பிக்கை இழக்கையில்,
உன் ஆறுதல்
இரண்டு அடி இனிக்கிறது
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
-திருக்குறள்