மருந்து
அறிவை மழுக்கும் மருந்து.
ஆணவம் கரைக்கும் மருந்து.
இளைஞனுக்கு இனிப்பு மருந்து.
ஈன்றவனுக்கு கசப்பு மருந்து.
உலகை ஆளும் மருந்து.
'ஊ'வால் ஈர்க்கப்படும் மருந்து.
எட்டாவது அதிசயமான மருந்து.
ஏழைக்கும் கிடைக்கும் மருந்து.
'ஐ' யால் தொடங்கும் மருந்து.
ஒப்பனையில் ஈடுபடவைக்கும் மருந்து.
ஓரவிழியால் ஊக்குவிக்கப்படும் மருந்து.
ஔவையால் உதவப்பட்ட மருந்து.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
