தென்றலை வென்றவள்
பேசிடும் இதழ்கள் பேசவில்லை
பூத்தது புன்னகை மவுனங்களே,
பேசிடாக் கண்கள் பேசிடுமே
புரிந்தவர் தெரிந்திடும் காதல்மொழி,
நேசம் கொண்டவர் வரவுகண்டே
நெருங்கிடத் துடிக்கும் இதயமது,
வீசும் தென்றலும் இவளழகில்
விலகிச் சென்றிடும் தனைமறந்தே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
