காத்துக்கிடக்கிறேன் காலங்களின் கரையில்
என்னவன் வருவான் என்னில் புதைவான்
உள்ளம் உருக காதலிப்பான் உதடுகள் தருவான்..
தென்றலும் தோற்க தேகம் வருடுவான்
தேவையை தீர்ப்பான் தேடி வருவான்..
உண்மையாய் இருப்பான் உணர்வையும் தொடுவான்
உறங்க மடி தருவான் உயிராய் இருப்பான்...
கண்ணான கனவனவன் கண்ணீரை துடைக்கும் கரங்களவன்
கஷ்தூரி மனம் கமலும் காதலின் கங்கையவன்...
நிலா சோறு தந்த தாயையும் நீளமான அன்பை தந்த தந்தையையும் அவனில் காண்பேன்
காத்துக்கிடக்கிறேன் காலங்களின் கரையில் பூத்துக்கிடக்கிறேன் விடியலின் முகட்டில்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
