பச்சிளத்தால் பச்சிளமானவன்

உன் சின்னப் பார்வையில்
என்னிதழ் விரிகிறது.
பகலவன் பார்வையில்
விரியும் மொட்டாய்!

உன் கன்னக் குழியில்
என்னகந்தை தொலைகிறது.
பெர்முடா முக்கோண சுழியில்
தொலையும் கலமாய்!

உன் கைத் தட்டோசையில்
என் மனம் ஆரவாரமாகிறது.
அமைதியான ஆழியில்
ஆரவாரமான அலைகளாய்!

உன்னிரு கால்களில்
என் முகம் உதைபடுகிறது.
விளையாட்டுத் திடலில
உதைபடும் கால்பந்தாய்!

உன் இனிய வரவினால்
என் வயது குழந்தையாகிறது.
ஒருவழிப் பாதையில்
எதிர்வரும் ஊர்தியாய்!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (16-Sep-15, 1:07 am)
பார்வை : 112

மேலே