மழலை மொழி

கோப்புகளும்
அதன் குழப்பங்களும்
கூடவே வந்திறங்கின
அலுவலகம் விட்டு
வீடுவந்த பின்னரும்...
அடுத்தடுத்த பணிகளிலும்
அது தொடரவே
அசையாது மனம்
அயர்ச்சியிலிருக்க...
உடம்பு சரியில்லையாவென்ற
மழலையோடு சிலநொடி
மனம்திறந்து உரையாட
தன் இருப்பிடம் நோக்கி
தானாகவே நடைகட்டின
கோப்புகளும்
அதன் குழப்பங்களும்...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்